கடலில் மூழ்கிய காரில் இருந்து இளம்பெண்ணை காப்பாற்றிய போலீசார் (படங்கள் இணைப்பு)

புதன், 18 பிப்ரவரி 2015 (16:58 IST)
நியூசிலாந்து நாட்டில் சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடலில் மூழ்கியது. இளம்பெண் ஒருவர் காரில் சிக்கிக்கொண்டார். அவரை அந்நாட்டு காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து துறைமுகத்துக்கு ஒரு ஆடம்பர சொகுசு கார் ஒன்று வேகமாக சென்றது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் துறைமுக பாலத்தில் இடித்துக்கொண்டு கடலுக்குள் பாய்ந்தது.
 
இதை அந்த வழியாக வந்த காவலர்கள் பால் வாட்ஸ் மற்றும் சைமன் ரசல் ஆகியோர் பார்த்தனர். கடலுக்குள் விழுந்த கார் முக்கால் பாகம் தண்ணீரில் மூழ்கியது. காரின் ஓட்டுனர் இருக்கையில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார். அவர்தான் அந்த காரை ஓட்டி வந்தார்.
அப்பெண்ணை காப்பாற்ற காவலர்கள் இருவரும் கடலுக்குள் பாய்ந்தனர். பெண்ணை வெளியே இழுத்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் கார் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதை திறக்க முடியவில்லை.
 
சிறிது நேரமானாலும் கார் முழுவதும் தண்ணீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்தது. எனவே கடலுக்குள் கிடந்த ஒரு கல்லை எடுத்து காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பெண்ணை வெளியே இழுத்து உயிருடன் மீட்டனர். இவர்களின் புத்தி கூர்மையை அனைவரும் பாராட்டினர்.

மேலும் படங்கள் அடுத்த பக்கம்...


மேலும் படங்கள் அடுத்த பக்கம்..
 








வெப்துனியாவைப் படிக்கவும்