வினோதம்: வீட்டில் நாய்களுக்கு பதிலாக ஓநாய்

வெள்ளி, 7 அக்டோபர் 2016 (15:46 IST)
கஜகஸ்தான் நாட்டில் உள்ள கிராமங்களில் வீட்டில் நாய்களுக்கு பதிலாக ஓநாய்களை வளர்த்து வருகின்றனர்.


 

 
கஜகஸ்தான், அல்மாட்டி பகுதியில் உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் அவர்களது வீட்டில் பாதுக்காப்பு நாய்களை வளர்ப்பது போல் ஓநாய்களை வளர்த்து வருகின்றனர்.
 
இதற்காக வேட்டைக்காரர்களிடம் இருந்து ஓநாய் குட்டிகளை விலைக்கு வாங்கி, நாய்களை போல் நன்கு பழக்கப்படுத்தி அதை வளர்த்து வருகின்றனர். ஒரு ஓநாய் குட்டியின் விலை 500 அமெரிக்க டாலர்.
 
இதுகுறித்து ஓநாயை 3 ஆண்டுகளாக வளர்த்து வரும் அந்த கிராமவாசி கூறியதாவது:-
 
ஓநாய் குட்டியை மூன்று ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். எப்போதாவதுதான் கட்டி வைப்பேன். அது என்னுடனே காலையில் நடைப்பயிற்சிக்கு வரும். என் குடும்பத்தினர் அதைக்கண்டு பயப்படுவதில்லை. 
 
ஒரே பிரச்சனை, நாயை விட ஓநாய்க்கு அதிக அளவில் உணவு வைக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.
 
மேலும் இதுகுறித்து ஓநாய் நிபுணர் அல்மாஸ் ஸபரோவ், ஓநாய் போன்ற விளங்குகளை மனிதர்களிடம் இருந்து தூரத்தில் வைத்திருப்பதுதான் நலம் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்