உலகின் அரியவகை விலங்கினங்களில் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியும் ஒன்று. இந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கி இனங்கள் கென்யா நாட்டில் மட்டுமே வாழ்ந்து வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த இனத்தின் மூன்று ஒட்டகச்சிவிங்கிகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் இப்போது தாயும் குட்டியும் வேட்டையர்களால் கொல்லப்பட்டு அதன் எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.