வாட்ஸ் அப்பில் பதிலளிக்காத மனைவியை விவாகரத்து செய்த வாலிபர்

புதன், 19 நவம்பர் 2014 (17:33 IST)
சவுதிய அரேபியாவை சேர்ந்த 30 வயது வாலிபர் வாட்ஸ் அப்பில் பதில் மெசேஜ் அனுப்பாத தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
 
சவுதி அரேபியாவில், மற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்யும் தனது மனைவி தனக்கு பதில் அளிக்காத காரணத்தினால் விரக்தி அடைந்த கணவர், அவரை விவாகரத்து செய்துள்ளார். மனைவியை விவகாரத்து செய்தவர் காரணம் கூறுகையில், "எனது மனைவி மிகவும் அதிகமான நேரங்களை செல்போனிலே கழிக்கிறார். வீட்டு வேலைகள் செய்வது மற்றும் குழந்தைகளை பார்த்துக் கொள்வதை புறக்கணிக்கிறார் என்றார். ஏன் உங்களது கணவரின் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்று அவரது மனைவிடம் கேட்டப்போது, அவர் பதில் அளிக்கையில், நான் மற்ற நண்பர்களுடன் பேசுவதில் மிகவும் பிசியாக இருந்தேன் என்றார். 
 
என்னுடைய மனைவி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சாட்டிங் செய்வதில் மிகவும் பிசியாக இருக்கிறார் என்று கணவர் குற்றம் சாட்டியுள்ளார். நான் அவளுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்தேன். அவர் எனது மெசேஜை படித்ததை புதிய அப்டேட்டிங் மூலம் தெரிந்துக் கொண்டேன் ஆனால் அவள் இதுவரையில் என்னுக்கு பதில் அளிக்கவும் இல்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை, என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் எடுத்த சர்வேயின்படி சமூக வலைதளம் காரணமாக விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 இங்கிலாந்து சர்வேயின் படி, பெரும்பாலும் பேஸ்புக்கே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்