ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை பழி தீர்ப்போம் - ஒபாமா சபதம்

புதன், 11 பிப்ரவரி 2015 (12:17 IST)
பெண் பிணைக்கைதியைக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை பழி தீர்ப்போம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
 
கடந்த 2013ஆம் ஆண்டு சிரியாவில், அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தைச் சேர்ந்த கய்லா ஜீன் ம்யூல்லர் என்ற தொண்டு நிறுவன ஊழிய பெண்ணை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். சுமார் 1½ ஆண்டாக பிணைக்கைதியாக இவர் பிடித்து வைக்கப்பட்டுருந்தார்.
 
ஆனால், ஜோர்டான் நடத்திய வான்வழி தாக்குதலில் இறந்ததாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் கடந்த வாரம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தனர். ஆனால் இதனை மறுத்து வந்த அமெரிக்க அரசாங்கம், தற்போது அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
 
இது குறித்து கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ”கய்லா கடத்தப்பட்டது மற்றும் மரணத்துக்கு காரணமான தீவிரவாதிகளை கண்டுபிடித்து, நீதியின் முன்பு நிறுத்துவோம். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது ஒரு பிரச்சனையே அல்ல, ஆனால் அவர்களை பழித்தீர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்