தூங்கும் கிராமம்: 2013-ல் இருந்து தொடரும் வினோதம்!!

திங்கள், 9 ஜனவரி 2017 (11:28 IST)
கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது.


 
 
கஜகஸ்தான் நாட்டின் கலச்சி என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் இந்த நோய் தாக்கம் தொடர்ந்து வருகிறது. இங்கு வசிக்கும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை தங்களுக்கே தெரியாமல் திடீரென தூங்க தொடங்கி விடுகின்றனர்.
 
அவ்வாறு தூங்குபவர்கள் சில சமயங்களில் 2 நாட்கள் கழித்து தூக்கத்தில் இருந்து விழிக்கின்றனர். மேலும், இவ்வாறு நீண்ட நேரம் தூங்கி எழுவதால் ஞாபக மறதி நோயும் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நோய்க்கான காரணங்களை கண்டறிய அறிவியலாளர்கள் பல சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்