நடுக்கடலில் மூழ்கிய கப்பல்: மீட்கப்பட்ட பள்ளியின் துணை முதல்வர் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (17:56 IST)
சுமார் 475 பயணிகளுடன் சென்ற தென் கொரிய கப்பலொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியானதாகவும், 260க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இந்நிலையில், மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பள்ளியின் துணை முதல்வர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
கப்பல் மூழ்கியப்போது மீட்பு பணியில் 100க்கும் மேற்பட்ட சிறிய கப்பல்கள், 18 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதகவும்,  இதுவரை சுமார் 179 பேர் காப்பாற்றபட்டுள்ளதாகவும் தெரிகிறது. 
 
கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஆவர். அவர்கள் பள்ளியில் இருந்து சுற்றுலாவிற்காக ஜெஜு தீவுக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் காணாமல் போன பள்ளி மாணவர்கள், கப்பல் மூழ்கிய போது அவர்களது உறவினர்களுக்கு அனுப்பிய உருக்கமான செய்திகள், மாணவர்களின் உறவினர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

மரண பிடியில் சிக்கியிருப்பது தெரிந்தவுடன், பல மாணவர்கள், அவர்களது உறவினர்களுக்கு தங்களின் அன்பு, மரண பயம், வேதனை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். 
இந்நிலையில், இக்கப்பல் மூழ்கியபோது அக்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பள்ளியின் துணை முதல்வர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
52 வயதான கங் மின் கியு, அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்கள் மாயமாகியிருக்கும் பள்ளியின் துணை முதல்வராவார். இவர் ஜின்டோ நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்தின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
 
இவர் தற்கொலை குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை என்பதால்,மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்