இதன் ஒருபகுதியாகவே, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான கிம்பர்லி கிளார்க்கின் தொழிற் சாலையை அரசே எடுத்துக்கொண்டு விட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பல பொருட்களை உற்பத்தி செய்து வந்த இந்தத் தொழிற்சாலை, அந்தத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்கப்படவுள்ளது.
இதுபோன்ற பல்வேறு தொழிற்சாலைகளை அரசே எடுத்துக் கொள்வது புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். உணவு மற்றும் மருந்துகளின் வினியோகத்தை முறைப்படுத்தி, பற்றாக்குறையிலிருந்து வெளியில் வருவதற்குத் தேவையான பணிகளை ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ முடுக்கி விட்டிருக்கிறார்.