இந்திய பயணப்பெட்டியை தேர்வு செய்யும் போட்டி - வெல்வது யார் ?

புதன், 6 மே 2015 (20:55 IST)
இந்தியாவில் பயணபெட்டியை அறிமுகபடுத்தும் நோக்கில் இந்தியாவிற்கு ஏற்ற பயணபெட்டி வடிவமைக்கும் போட்டியை சேம்சொனைட் நிறுவனம் அறிவித்துள்ளது.  


 

 
அமெரிக்காவை தலைமையிடமாக இயங்கும் சேம்சொனைட் நிறுவனம் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் சாமான்களை கொண்டு செல்லும் பயண பெட்டி தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.  
 
இந்த நிறுவனம் உலக அளவில் புதிய பயணப்பெட்டியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் பயணபெட்டியை அறிமுகபடுத்தும் நோக்கில் இந்தியாவிற்கு ஏற்ற பயணபெட்டி வடிவமைப்பை, அதன் வாடிக்கையாளர்கள் வடிவமைத்து அனுப்பும் போட்டியை இணையம் மூலமாக நடத்துகிறது.   
 
இதில், சிறந்து அளவில் வடிவமைத்து பொதுமக்களால் வாக்களித்து முதலிடம் பெறும்.  இந்த வடிவமைப்புடன் கூடிய இந்த பயணப் பெட்டியை இனி தயாரித்து பொது மக்கள் மத்தியில் வினியோகம் செய்ய உள்ளது. 
 
இந்த போட்டியில் தமிழகத்தை சார்ந்த சுரேந்திர குமார் என்பவர் தமிழர்களின் அடையாளத்துடன், இந்தியாவின் பண்பாட்டை உலகிற்கும் உணர்த்தும் வகையில் ஒரு வடிவமைப்பை உருவாக்கியுள்ளார். அதில், திருவள்ளுவரையும் தமிழையும் முதன்மைபடுத்தும் விதமாக இந்த வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், பல தேசிய இனங்கள் சேர்ந்துதான் இந்தியா என்று செய்தியையும் இதன் மூலம் கூறியுள்ளார். இதனால், சுரேந்திர குமார் அவர்களின் வடிவமைப்புக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும், இவரைப் போலவே பலரும் போட்டியில் குதித்துள்ளதால், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்