எல்லாம் நன்மைக்கே! – ட்ரம்ப் ட்வீட்டால் கலக்கத்தில் உலக நாடுகள்!

புதன், 8 ஜனவரி 2020 (10:13 IST)
ஈரான் அரசு அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதிபர் ட்ரம்ப் “எல்லாம் நன்மைக்கே” என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஈராக்கில் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வல்லரசு நாடுகளுடன் கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த ஈரான் அரசு, அமெரிக்க படைகளை வெளியேற்ற தீர்மானம் கொண்டு வந்தது.

இந்நிலையில் ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்கியுள்ளது ஈரான். இதை அமெரிக்க அரசும் ஒத்துக் கொண்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப் ”எல்லாம் நன்மைக்கே! ஈரான் ராணுவம் ஈராக்கில் உள்ள இரண்டு தளங்களை ராக்கெட்டால் தாக்கியுள்ளன. அமெரிக்க ராணுவத்திடம்தான் அதிநவீன ராணுவ தளவாடங்கள் உள்ளன. நாளை தாக்குதல் குறித்த அறிக்கையோடு வருகிறேன்” என கூறியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பலமான எதிர் தாக்குதலை அமெரிக்கா தொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் போர் பதட்டம் அதிகமாகி வருவதால் உலக நாடுகள் பல கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்