அவெஞ்சர்ஸை அடிச்சு சாப்பிடும் அமெரிக்க தேர்தல்! – எவ்வளவு செலவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (08:56 IST)
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த தேர்தலுக்கு செலவிட்ட தொகை இதுவரையிலான அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே அதிகம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக நடப்பு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இருவரும் காரசாரமான தேர்தல் பரப்புரைகள், விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்க வரலாற்றிலேயே அதிகமான செலவுகளை கொண்ட தேர்தல் இது என்று கூறப்பட்டுள்ளது. இரு கட்சிகளும் தேர்தலுக்காக செலவிட்டுள்ள மொத்த தொகை 14 பில்லியன் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஹாலிவுட் பட நிறுவனமான மார்வெல் உருவாக்கிய 23 சூப்பர் ஹீரோ படங்களின் மொத்த பட்ஜெட்டே 4.5 பில்லியந்தானாம். தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இதனால் சரியான மருத்துவ வசதிகள் கிடைக்காத சூழல் என மக்கள் திண்டாடி வரும் நிலையில் இவ்வளவு பெரும் தொகை செலவழிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்