5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பலியாகிறது: யுனிசெப் தகவல்

செவ்வாய், 21 அக்டோபர் 2014 (20:45 IST)
வன்முறையால் 5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாகிறது என யுனிசெப் தெரிவித்துள்ளது.
 
ஐநா குழந்தைகள் நல நிறுவனமான யுனிசெப் பின் அமெரிக்க கிளை சமீபத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது. அதில் சர்வதேச அளவில் 5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை வன்முறைக்கு பலியாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
20 வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் தங்கள் வீடுகள், பள்ளிகள் மற்றும் சமுதாயத்தில் பாதுகாப்பின்றி உள்ளனர்.
 
அதிகவேகமாக நகர்புறமயமாகுதல், வேலையின்மை, சமத்துவம் இன்மை போன்றவைகளால் வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன.
 
உலகில் நாள் ஒன்றுக்கு 345 குழந்தைகள் வன்முறையால் உயிரிழக்கின்றனர். அதை தடுக்க சர்வதேச நாடுகளைச் சேர்ந்த அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
 
குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர். அவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்