தாய்லாந்தில் பெண்கள் ஆபாச செல்பி எடுக்க தடை

வியாழன், 19 மார்ச் 2015 (19:16 IST)
கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் 'செல்பி' (Selfie) எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் 'செல்பி' எடுக்கப்படுகிறது.
இன்றைக்கு 'செல்பி' ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு 'டிஜிட்டல் புற்று நோய்' போல விரைந்து பரவுகிறது.
 
ஸ்மார்ட்போன்கள் செல்பி ஆசைக்கு எண்ணெய் ஊற்றுகிறது, சமூக வலைத்தளங்கள் அதைப் பற்ற வைக்கின்றன.
 
பொது இடங்களில், சுற்றுலாத்தலங்களில், நண்பர் சந்திப்புகளில் தொடங்கி இந்த செல்பி - ரகசியங்கள் பேணும் தனியறைகள் வரை நீள்கிறது. பெண்கள் தங்களை தாங்களே படம் எடுத்து கொள்கின்றனர். இதனால் அவர்களது அந்தரங்க படங்களும் சில சமயம் வெளியாகி விடுகிறது.
 
தாய்லாந்து அரசு அந்நாட்டு பெண்கள் ஆபாசமாக ’செல்பி’ புகைப்படம் எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. ஏனெனில் புகைப்படங்கள் மற்ற செல்போன்களுக்கு அனுப்பி பரவி வருவதால் பெண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி ‘செல்பி’யில் அந்நாட்டு பெண்கள் ஆபாசமாக புகைப்படம் எடுக்கக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த ஆபாச செல்பியால் அந்நாட்டின் கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்