ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்?

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (11:58 IST)
ரஷ்யாவின் பெல்கோரோட்டில் உள்ள எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக புகார். 

 
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஆறாவது வாரத்தை எட்டியுள்ளது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவை எதிர்த்து உக்ரைனும் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
 
இந்நிலையில் ரஷ்யாவின் பெல்கோரோட்டில் உள்ள எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் குறைந்த உயரத்தில் எல்லையைக் கடந்த பின்னர் ரஷ்ய நகரமான பெல்கோரோடில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையத்தை வெள்ளிக்கிழமை தாக்கியதாக பிராந்திய ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார். 
 
மேலும் ஆயுதக் கிடங்கில் குண்டு வெடிப்புகளால் மாகாணமே முவுவதுமாக அதிர்ந்தது எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைன் தரப்பில் இருந்து இது குறித்து எதும் கூறப்படவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்