ரஷ்ய கப்பலை உருகுலைத்த உக்ரைன்! – கலவரமான கருங்கடல்!

வியாழன், 14 ஏப்ரல் 2022 (17:40 IST)
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய கப்பல் உருகுலைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் இருதரப்பு ராணுவத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த போர் விவகராத்தில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் சில பகுதிகளில் பதில் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. கருங்கடலில் ரஷ்ய போர் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் கப்பல் உருகுலைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் உக்ரைன் நடத்திய தாக்குதலில் கப்பல் சிதையவில்லை என்றும், கப்பலில் இருந்த எரிபொருள் விபத்தாக வெடித்ததால் சேதமடைந்ததாகவும் ரஷ்யா கூறி வருகிறது. இதனால் கருங்கடல் பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்