கர்ப்பிணி பெண்கள் காபி குடித்தால் குழந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு

திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (19:49 IST)
கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் இரண்டு கப் காபி குடித்தால், அவர்களின் குழந்தைக்கு லுகேமியா பாதிப்பு ஏற்பட 60 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

American Journal of Obstetrics and Gynaecology -இல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில்,  கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் இரண்டு கப் காபி குடித்தால் அவர்களின் குழந்தைக்கு ரத்த புற்றுநோய் (லுகேமியா) பாதிப்பு ஏற்பட 60 சதவீதம் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கர்ப்பிணி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நாளைக்கு 4 கப்களுக்கு மேல் காபி குடிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இதே ஆபத்து 72 சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காபியில் உள்ள கபைன் கருவின் செல்களில் டி.என்.ஏ. மாறறத்தை ஏற்படுத்தலாம் என்றும் இதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமெனுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்