ஓவராய் ஆடிய டிவிட்டருக்கும் ஆப்பு

செவ்வாய், 5 அக்டோபர் 2021 (11:01 IST)
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் பக்கங்கள் முடங்கியதை கேலி செய்த ட்விட்டர் தளமும் முடங்கியது.
 
உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் வாட்ஸப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் முடங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் இன்று காலை இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.
 
ஆனால் நேற்று இரவு ஆதங்கமடைந்த நெட்டிசன்கள், ட்விட்டரில் பல்வேறு வகையான மீம்ஸ்களை பதிவிட்டு முடங்கிய செயலிகளை கலாய்த்தனர். பயனாளர்களின் பதிவுகள் மற்றும் மீம்ஸ்களுக்கு வலு சேர்க்கும் விதமாக ட்விட்டர் நிறுவனமும் அனைவருக்கும் பதில் அளித்து வந்தது. 
 
அதிக பயனாளர்கள் ஒரே நேரத்தில் ட்விட்டர் பக்கம் திரும்பியதால் அதன் சேவையும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டது. இதனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் பக்கங்கள் முடங்கியதை கேலி செய்த ட்விட்டர் தளமும் முடங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்