உங்கள் பாஸ்வேர்டை மாற்றுங்கள்: ட்விட்டர் எச்சரிக்கை...

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (16:26 IST)
தமது உள் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட சில கோளாறுகள் வெளிப்பட்டதை அடுத்து தங்கள் கடவுச் சொல்லை (பாஸ்வேர்டை) மாற்றும்படி 330 மில்லியன் பயனர்களை ட்விட்டர் எச்சரித்துள்ளது.
 
இதுகுறித்து விசாரணை நடத்தியதில், யாருடைய பாஸ்வர்டும் திருடப்படவோ அல்லது தவறாக பயன்படுத்தப்படவோ இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
 
எனினும், ட்விட்டர் பயனர்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் தங்கள் பாஸ்வர்டை மாற்றுவது நல்லது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எத்தனை பாஸ்வர்டுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்ற தகவலை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை.
 
சில வாரங்களுக்கு முன்பு கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்த ட்விட்டர் நிறுவனம், அதை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக அதன் ஊழியர் ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்திற்கு ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்