நாட்டை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச்செல்லாத பிரதமர்

திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (12:31 IST)
ஆப்பிரிக்க  நாடான துனிசியாவில் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிப் பெற்றதை அடுத்து பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


ஆப்பிரிக்க  நாடான துனிசியாவில் ஹபிப் எஸ்சிட் (67) என்ற தொழில் நுட்ப வல்லுனர் கடந்த ஆண்டு பிப்ரவரி 6–ந் தேதி  முதல் பிரதமராக இருந்து வந்தார். அந்நாடில், புதிய வேலைவாய்ப்புகளை அவர் உருவாக்கவில்லை. மேலும், நிதி சீர்திருத்தங்களிலும் முன்னேற்றம் ஏற்படுத்த வில்லை. இதனால் பொருளாதார வளர்ச்சியும் தடைப்பட்டது.

இதன் காரணமாக அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவரை பதவி நீக்கம் செய்வதை ஆதரித்து மொத்தம் உள்ள 191 எம்.பி.க்களில் 118 பேர் ஓட்டு போட்டனர். 3 எம்.பி.க்கள் மட்டும் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். மற்றவர்கள் ஓட்டெடுப்பை புறக்கணித்து விட்டனர். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. பிரதமர் பதவி இழந்தார். 4 கட்சிகளை கொண்ட ஆளும் கூட்டணி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்