உபதேசம் ஊருக்குதான் எங்களுக்கு இல்லை; பொறுமை இழந்த டிரம்ப்

வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (13:47 IST)
வடகொரியாவுடன் இனி பேச்சுவார்த்தை தீர்வாகாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளார்.


 

 
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை சோதனை நடத்தி வருகிறது. இது உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் முதன்மை நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது வடகொரியா.
 
அண்மையில் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை ஜப்பான் நாட்டை கதிகலங்க வைத்தது. அமெரிக்காவும் தொடர்ந்து வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் வடகொரியா அதனையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை.
 
வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை தொடர்பாக ஐநா சபை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்கா எல்லா விதத்திலும் வடகொரியாவை எச்சரித்து பார்த்துவிட்டது. இன்னும் போர் ஒன்றுதான் நடக்கவில்லை.
 
மூன்றாம் உலக போர் ஏற்படும் அபாயம் கடந்த சில மதங்களாக இருந்தது வருகிறது. ஆனால் மற்ற உலக நாடுகள் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு அதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 
 
அதில், அமெரிக்கா வடகொரியாவுடன் 25 ஆண்டுகள் பேசிக் கொண்டு உள்ளது. இனி பேச்சு வார்த்தை தீர்வாகாது என பதிவிட்டுள்ளார். அதாவது இனி பேசுவதில் பதில் கிடைக்காது அடுத்து போர்தான் என்பதை தெரிவித்துள்ளார். 
 
இதேபோன்று சீனா, இந்தியா எல்லை பிரச்சனையில் தலையிட்ட அமெரிக்கா, இந்தியாவும் சீனாவும் பிரச்சனையை சரி செய்ய பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தது. ஆனால் வடகொரியா விவகாரத்தில் பேச்சு வார்த்தை தீர்வாகாது என்று தெரிவித்துள்ளது.
 
மேலும் டுவிட்டரில் டிரம்ப பதிவிட்ட கருத்துக்கு அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, பேச்சுவார்த்தை நடத்த ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்