அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தற்போது அமைச்சர்களை தேர்வு செய்து வருவதாகவும், அதில் எலான் மஸ்க்கிற்கு முக்கிய பதவி கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், அவருக்கு நெருக்கமான இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவருக்கு பதவி கொடுக்க மறுத்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்காவின் 47வது அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், அவரது அரசாங்கத்தில் இடம் பெற உள்ள மந்திரிகள் குறித்த ஆலோசனை தற்போது நடந்து வருகிறது. இதில் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கடந்த முறை டிரம்ப் அமைச்சரவையில் முக்கிய பதவி பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே என்பவருக்கு இந்த முறை பதவி கிடைக்காது என்று கூறப்படுகிறது/ அதே போல் கடந்த முறை அமைச்சரவையில் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த பைக் பாம்பியோ என்பவருக்கும் இந்த முறை பதவி கிடையாது என்று கூறப்படுகிறது. இந்த முறை புதிய அமைச்சர்கள் அதிகம் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.