ஒரே மரத்தில் 40 வகையான பழங்கள்: விஞ்ஞானி சாதனை

செவ்வாய், 29 ஜூலை 2014 (13:06 IST)
ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலை கழகத்தில் விஞ்ஞானி சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். இவர் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் நீண்ட நாடட்களாக ஈடுபட்டு வந்தார்.

இந்த முயற்சியின் படி ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார்.
தற்போது அந்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்துள்ளன.

இந்தக் காட்சி அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த மரம் அனைவரையும் கவரும் வண்ணம் காட்சியளிக்கிறது.

இது குறித்து சாம் வான் அகேன் கூறுகையில், “என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக, இந்த மரத்தைக் குளிர்காலத்தில் பார்ப்பவர்களுக்கு செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை என வானவில்லை போல் காட்சியளிக்கும்.

கோடை காலத்தில் பல்சுவை கொண்ட பழங்களைக் கொடுக்கும், இதுபோன்ற தாவர ஆராய்ச்சியை, தான் இனி தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்