7 வினாடிகளில் பீரை ஒரே மூச்சில் குடித்த ஆஸ்திரேலிய பிரதமர்

திங்கள், 20 ஏப்ரல் 2015 (18:51 IST)
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் சமீபத்தில் இவர் மதுபாரில் பீர் குடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
நேற்று முன்தினம் இரவு ஆஸ்திரேலிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் சைமன் கார்டல் வீரர்களுக்கு மது விருந்து அளித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிரதமர் டோனி அபோட்டை சந்தித்து தங்களுடன் மது விருந்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட இவர் ஒரே மூச்சில் பீர் குடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டனர்.
 
இந்த விருந்தில் டோனி அபோட் தனது கிளாசில் ஊற்றப்பட்ட 425 மி.லி. பீரை 7 வினாடிகளில் ஒரே மூச்சில் குடித்து முடித்தார். இது சமூக வலை தளங்களில் விவாத பொருளாகிவிட்டது. அதாவது கடந்த 1983 முதல் 1991 வரை பிரதமராக இருந்த பாப் ஹாவ்க்கும், டோனி அபோட்டுக்கும் பீர் குடிக்கும் போட்டி வைத்தால் யார் முதலில் குடித்து முடிப்பார்கள் என விவாதிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்