டீன் ஏஜ் பருவத்தினர் இனிமேல் டிக்டாக் ஐ பயன்படுத்த முடியுமா? ஆப்பு வைத்த டிக்டாக்

வியாழன், 20 பிப்ரவரி 2020 (20:30 IST)
டீன் ஏஜ் பருவத்தினர் இனிமேல் டிக்டாக் ஐ பயன்படுத்த முடியுமா?
உலகம் முழுவதும் டிக்டாக் மிக வேகமாக பரவி வரும் செயலிகளில் ஒன்று என்பதும் குறிப்பாக இந்தியாவில் இளம் பெண்கள் இந்த டிக்டாக்கில் அடிமையாகி உள்ளனர் என்பதும் தெரிந்ததே. ஒரு சில டிக் டாக் வீடியோக்கள் ஆபாசத்தின் உச்சத்திற்கு செல்வதும் இதனால் கள்ளக்காதல் உட்பட பல சமூகக் குற்றங்கள் நிகழ்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினர் டிக்டாக்கை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை தற்போது ஏற்றுக்கொண்டு ஒரு புதிய ஆப்ஷனை டிக்டாக் நிர்வாகம் கொண்டுவந்துள்ளது 
 
இதன்படி டிக்டாக்கில் ஃபேமிலிமோட்’ என்ற ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன் ஆன் செய்யப்பட்டு விட்டால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தாங்களாகவே வீடியோவை அப்லோட் செய்ய முடியாது என்றும் அவருடைய பெற்றோர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே அப்லோட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் குழந்தைகளின் கணக்குகளை பெற்றோர் கணக்குடன் இணைந்து குழந்தைகள் என்ன மாதிரியான வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஆப்ஷன் முதல்கட்டமாக பிரிட்டன் நாட்டில் மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்து அதன்பின் விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் இந்த ஆப்ஷன் அனுமதிக்கப்படும் என்று டிக்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்