சவூதி இளவரசரின் காரை திருடிய பலே திருடன்!!

சனி, 19 நவம்பர் 2016 (12:35 IST)
சவூதி இளவரசர் ஷேக் அலி இப்ராஹீம் இங்கிலாந்தில் உள்ள மேஃபேர் கராஜில் தனக்கு சொந்தமான ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை நிறுத்தி வைத்திருந்தார். 


 
 
அந்த காரின் ஒரு சாவி இளவரசர் ஷேக் இப்ராஹீமிடமும், மற்றொரு சாவி அவரது டிரைவரிடமும் இருந்தன. அந்த காரை வாரம் ஒருமுறை இப்ராஹீமின் டிரைவர் போய் பார்த்து வருவது வழக்கம். 
 
இதேபோன்று, இப்ராஹிமீனின் டிரைவர் காரை பார்க்க சென்றிருக்கிறார். ஆனால், காரை காணவில்லை. இதுகுறித்து இப்ராஹீமுக்கு தகவல் அளித்துள்ளார். 
 
இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த விசாரணையில் அந்த கார் வேறு ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
 
இதையடுத்து, விசாரணை நடத்தியதில் முகம்மது ஹம்சா [25] என்ற இளைஞர் அந்த காரை போலி ஆவணங்கள் மூலமாக தனது பெயருக்கு மாற்றியது தெரிய வந்தது. 
 
மேலும், இங்கிலாந்து போக்குவரத்து பதிவு அலுவலகத்திடமிருந்து கிடைத்த சான்றுகளை காண்பித்து ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்திடமிருந்து நேரடியாக டூப்ளிகேட் சாவிகளை பெற்றிருக்கிறார்.
 
97,000 பவுண்ட் மதிப்புடைய அந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை 27,000 பவுண்ட் விலையில் விற்பனை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
 
இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கு வந்த ஹம்சா, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அந்த கார் மீது எனக்கு சட்டரீதியாக முழு உரிமை உள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்