இனி இந்த 7 குற்றங்களுக்கு மரண தண்டனை கிடையாது - வியட்நாம் முடிவு

சனி, 28 நவம்பர் 2015 (16:02 IST)
வியட்நாமில் ஏழு வகையான குற்றங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மரண தண்டனையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.
 

 
வியட்நாமில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அரசு தொடர்ந்து ஊழலை ஒழிக்க முன்னுரிமை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊழலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வருகிறது.
 
அவ்வாறு வழங்கப்பட்ட 75 சதவிகிதம் மரண தண்டனை தீர்ப்புகள் பின்னர் சிறை தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் மரண தண்டனைக்கு தடை செய்யப்பட்டு வருகிறது. மனித உரிமை குழுக்களும், மேற்கத்திய நாடுகளும் மரண தண்டனையை கைவிடுமாறு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தன.
 
இது தொடர்பாக வெள்ளியன்று நடந்த நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சுமார் 75 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மரண தண்டனை தொடர்பான சட்டத்தில் சில மாறுதல்கள் கொண்டு வந்துள்ளது.
 
இதன் அடிப்படையில் எதிரிகளிடம் சரணடைவது, ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்ப்பது, கொள்ளை, தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டம், மருந்து ஒதுக்கீட்டில் முறைகேடு, மருந்துகளை கையகப்படுத்துவது போதைப் பொருட்கள் வைத்திருப்பது தொடர்பான 7 குற்றங்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனையை கைவிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய சட்டம் வரும் 2016ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்