அப்பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.அத்துடன் அவரது வயிற்றில் உள்ள 23 வாரங்களே ஆன குழந்தையை, அறுவை சிகிச்சை செய்து உடனடியாக வெளியே எடுத்தால் மட்டும்தான் அப்பெண் பிழைக்க முடியும் என்ற மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வெறும் 23 வாரங்களே ஆன அக்குழந்தை 245 கிராம் எடையுடன் தான் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். மேலும் இக்குழந்தை பிறந்தால் ஒருமணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்குமென்று தெரிவித்த நிலையில் தீவிரமான மருத்துவர் சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்ட குழந்தை தற்பொழுது 2.2. கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.