குட்டை பாவடையால் அடி வாங்கிய பெண் நீச்சல் உடையால் பிரபலம்

புதன், 19 அக்டோபர் 2016 (17:10 IST)
ஈரானை சேர்ந்த பெண் ஒருவர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் தான் இளம்வயதில் குட்டை பாவடை அணிந்ததால் 40 பிரம்பு அடை வாங்யதாகவும், தற்போது நீச்சல் உடை வடிவமைப்பாளராக இருப்பதாகவும் எழுதியுள்ளார்.


 

 
ஈரானை சேர்ந்த தாலா ராச்சி (35) என்பவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் புகழ் பெற்ற பேஷன் டிசைனராக இருந்து வருகிறார். இவர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் தான் இளம்வயதில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். 
 
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
நாங்கள் குடும்பத்துடன் ஈரானில் வசித்து வந்தோம். எனக்கு 16 வயதிருக்கும் போது ஒரு பார்டிக்கு குட்டை பாவடை அணிந்து சென்றேன். அப்போது இஸ்லாமிய பாதுகாவலர்கள் என்று கூறி சிலர் என்னையும், என்னை போல் உடை அணிந்திருந்த சில பெண்களையும் ஒரு அறைக்கு அழைத்து சென்றனர்.
 
அறையில், இஸ்லாமியராக இருந்து கொண்டு இப்படி உடை அணியலாமா, என்று 40 முறை பிரம்பால அடித்தனர். அழுதபடியே வீட்டுக்கு சென்றேன். இதனால் என் குடும்பதாருடன் அமெரிக்கா சென்றேன்.
 
தற்போது தண்டிக்கப்பட்ட துறையில் நான் வல்லுநராக இருக்கிறேன், என்று எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்