பாதுகாப்பு குறைபாடு: 5 லட்சம் கார்களை திரும்ப பெற டெஸ்லா முடிவு!

வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:19 IST)
பாதுகாப்பு குறைபாடு காரணமாக 5 லட்சம் கார்களை திரும்ப பெற டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவில் சமீபத்தில் அறிமுகம் செய்த காரில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. காரில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கருத்தில் கொண்டு இதுவரை விற்பனை செய்த கார்களை திரும்ப பெற டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 5 லட்சம் கார்களை டெஸ்லா நிறுவனம் வாடிக்கையாளரிடம் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும் திரும்ப பெறப்படும் கார்களுக்கு பதிலாக பணம் கொடுக்கப்படுமா? அல்லது புதிய கார்கள் கொடுக்கப்படுமா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்