ஆப்பிரிக்க நாட்டில் தீவிரவாத தாக்குதல்: 20 பேர் பலி

சனி, 16 ஜனவரி 2016 (11:17 IST)
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா ஃபாசோவின் வாகடூகு நகரில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அல்கொய்தா தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது.


 
 
மேற்கு ஆப்பிரிக்காவில் நேற்று வாகடூகு நகரிலுள்ள ஸ்பெலெண்டிட் ஹோட்டலுக்கு முன் இருந்த 10 க்கு அதிகமான வாகனங்களை தீயிட்டு கொளுத்திய தீவிரவாதிகள், ஹோட்டலுக்குள் நுழந்தனர்.
 
ஹோட்டலுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் வரை பலியாகிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
 
பர்கினா ஃபாசோ நாட்டு ராணுவமும், பிரான்ஸ் படையினரும் சேர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 63 பேர் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மீட்க்கப்பட்டவர்களில் பலர் பலத்த காயங்களுடன் உள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கூறினார்.
 
தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 20 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்