ஈரான் நாட்டை சேர்ந்தவர் மெர்ஹான் கரீமி நாசேரி. இவர் தனது தாயை தேடி 1980 வாக்கில் ஐரோப்பாவுக்கு பயணம் செய்தார். இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து, ஜெர்மனி என பல நாடுகளுக்கு அவர் பயணித்த நிலையில் அவருக்கு குடியுரிமை இல்லாததால் அந்த நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அங்கிருந்து பாரிஸ் சர்வதேச விமான நிலையம் வந்த அவர் அங்குள்ள இரண்டாம் முனையத்தின் ஒரு பகுதியை தனது வீடாக்கி அங்கேயே வாழ்ந்து வந்தார். வாழ்நாள் முழுவதும் செய்தித்தாள்கள், புத்தகங்கள் படிப்பதிலும், எழுதுவதிலும் தனது வாழ்க்கையை அவர் செலவழித்தார்.