சகோதரியை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்க முயன்று உயிரிழந்த சிறுவன்

திங்கள், 5 மே 2014 (14:43 IST)
அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தனது சகோதரியை காக்க முயன்ற 8 வயது சிறுவனை 16 வயது நபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அமெரிக்காவின் விர்ஜினா மாநிலத்தில், மார்டின் காப்  என்ற 8 வயது சிறுவன் தனது 12 வயது சகோதரியோடு விளையாடிக் கொண்டிருந்தபோது 16 வயது நிரம்பிய நபர் அங்கு வந்து சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்.
 
இதனை தடுக்க முயன்ற மார்டினின் தலையில் கல்லை போட்ட அந்த நபர் அதன் பிறகு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். தலையில் படுகாயம் அடைந்ததால் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சகோதரியை காப்பாற்ற தனது உயிரை இழந்த சிறுவனுக்கு பலரும் அஞ்சல் செலுத்திவருகின்றனர். இது குறித்து தெரிவித்த ஒருவர், மார்ட்டினும் அவரது சகோதரியும் எப்போதும் ஒற்றுமையாகத்தான் இருப்பார்கள். மார்டின், அவரது சகோதரியை பாதுகாக்க தைரியமாக போராடியதை பாராட்ட வேண்டும்  என்று தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்