அப்போது ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டார். ஜெர்மனியை மீண்டும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்வேன் என ஹிட்லர் தெரிவித்தார். அதே போன்று, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்பும் அமெரிக்காவை மீண்டும் பெரிய அளவில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என உறுதி அளித்துள்ளார் என்று மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதும்,. அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பெண்கள் அவமதிப்பு உள்ளிட்ட புகார்களும் அவர் மீதான எதிர்ப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.