தமிழ் துரோகிகளை சேர்க்க கூடாது: சிறிசேனாவிடம் த.தே.கூ வலியுறுத்தல்

செவ்வாய், 13 ஜனவரி 2015 (19:26 IST)
ராஜபக்சேவுடன் இருந்த தமிழ் துரோகிகளை அரசில் இணைக்க வேண்டாம் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் வலியறுத்தியுள்ளனர்.
 
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சந்தித்து பேசினர்.
 
அப்போது, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்தோரை புதிய அரசில் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ள வேண்டாம் என அதிபரிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வலியுறுத்தினார்.
 
ராஜபக்சே ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் தமிழர்கள் கருணா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்