அமெரிக்காவின் உயரமான அணை: உடையும் அபாயம்; மக்கள் வெளியேற்றம்!!

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (14:22 IST)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஓரோவில் அணை (Oroville Dam) உடையும் அபாயத்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். 


 
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். கலிபோர்னியாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 
 
கனமழை காரணமாக வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஓரோவில் அணை வலுவிழந்து எந்நேரத்திலும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
 
50 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிக உயரமான அணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்