சமீபத்தில் தலீபான்கள் தங்கள் எதிர்ப்பாளர்கள் பலரை சுட்டுக் கொல்லும் வீடியோ வைரலான நிலையில், கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் சுமார் 1,500 தலீபான்களை ராணுவம் கொன்று குவித்துள்ளதாக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையை தலீபான் அமைப்பு மறுத்துள்ளதுடன், அரசு அதிகபடுத்தி காட்டுவதாக கூறியுள்ளது.