பாகிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்பு

திங்கள், 30 ஜனவரி 2023 (22:54 IST)
பாகிஸ்தான் நாட்டிலுள்ள பெஷாவர் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ள நிலையில்,  இத்தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
நாட்டில்  பொருளாதாரப் பற்றாக்குறை,   டாலருக்கு  நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளுக்கு இடையே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இன்று, பெஷாவர் நகரில்  உள்ளா மசூதியில்,பிற்பகல் தொழுகையின்போது, பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது,. இத்ல், 46  பேர் பலியாகினர்,. 150 பேர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், ஆப்கானில்  உமர் காலித் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்ப்பதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்