சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி: அமெரிக்கா

வெள்ளி, 27 ஜூன் 2014 (15:29 IST)
சிரிய அரசை எதிர்த்துப் போராடிவரும் கிளர்ச்சியாளர்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவியை அமெரிக்கா வழங்குகிறது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. தற்போது அது உள்நாட்டு போராக மாறிவிட்டது. அமைரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள், ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் படைக்கு ரூ. 3 ஆயிரம் கோடியை அமெரிக்கா வழங்குகிறது. அதன் மூலம் அவர்கள் அதிநவீன போர்க் கருவிகளை வழங்குவதுடன், அவர்களுக்குப் போர் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதற்கான ஒப்புதலை பெற அதிபர் ஒபாமா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களைப் பலப்படுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்