வெவ்வேறு தடுப்பூசி போட்டால் அதிகரிக்கும் எதிர்ப்பு சக்தி! – ஸ்வீடன் ஆய்வில் தகவல்!

செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:14 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஸ்வீடன் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரொனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஸ்வீடனில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. முதல் டோஸ் ஆஸ்ட்ராஜெனிகாவும், இரண்டாவது டோஸ் பைசர் தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்