நிதி மோசடி வழக்கில் ராஜபக்சேவின் மனைவிக்கு சம்மன்

வியாழன், 28 மே 2015 (16:23 IST)
மகிந்த ராஜபக்சேவின் மனைவியான சிரந்தி ராஜபக்சேவிற்கு அந்நாட்டு நிதி மோசடிப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
 

 
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மனைவி சிரந்தி ராஜபக்சேவுக்கு நிதி மோசடி செய்ததாக கூறி, அந்நாட்டு நிதி மோசடி தடுப்புப் பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், ஜூன் 1ஆம் தேதியன்று நிதிமோசடி தடுப்புப் பிரிவில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சிறிலிய சவிய என்ற அமைப்பின் மூலம் நிதி மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த சிரந்தியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சிரந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதை ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே தனது சமூக வலைதளத்தில் உறுதிசெய்துள்ளார். சிறிசேனா அரசு தங்கள் குடும்பத்தை சித்ரவதை செய்ய முயல்வதாகவும் நமல் சாட்டியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்