ஹார்வர்டு மருத்துவ பல்கலைக்கழகத்தில் கணக்கு படிக்கும் குரங்குகள்

திங்கள், 28 ஏப்ரல் 2014 (12:42 IST)
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3 குரங்குகளுக்கு கணக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு மருத்துவ பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் மார்கரெட் லிவிங்ஸ்டன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்த கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
1 முதல் 25 வரையிலான எண்கள் எழுதப்பட்ட அட்டைகளையும், ஆங்கில எழுத்து அட்டைகளையும் காண்பித்து, அந்த குரங்குகளுக்கு கூட்டல் கணக்கு கற்பித்துள்ளனர். குரங்குகள் அடிப்படையான கூட்டல் கணக்குகளை சிறப்பாக போடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
வெப்பர் விதியின் அடிப்படையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அகநிலை உணர்வைத் தூண்டி வளர்க்கும் மனோதத்துவத்துக்கு பயன்படுத்தப்படும் கோட்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்