அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவ கல்லூரியில் பான்கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.
கெய்ட்லின் நெல்சன் என்ற மாணவி இந்த போட்டியில் பங்கேற்றார். போட்டியில் 4 துண்டு கேக்குளை சாப்பிட்ட அவரது தொண்டையில் கேக் அடைத்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.
அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பான் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.