இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி

புதன், 29 ஜூலை 2015 (00:08 IST)
இந்தோனேஷியாவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பொது மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.
 

 
இந்தோனேஷியாவில், பப்புவாவிற்கு மிக அருகில் ரியன் ஜெயபுரா கடலோர பகுதி உள்ளது. இங்கு, ஜூலை 28 ஆம் தேதி, அந்நாட்டு நேரப்படி அதிகாலை 6.41 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம், ஜெயபுராவிலிருந்து 250 கிலோ மீட்டர் மேற்காக ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலநடுக்கம், சுமார் 4 நிமிடங்கள் நீடித்தது. இதனால், வீடுகளில் கடும் அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் தங்களது வீடுகளில் இருந்து ரோட்டுக்கு ஓடி வந்தனர். அங்கு அவர்கள் பெரும் அச்சத்துடன் இருந்தனர்.
 
இந்த நில நடுக்கம் குறித்து பேரிடர் மைய பிரதிநிதி சுடோபோ புர்வோ நுங்கரகோ கூறுகையில், நில நடுக்கம் குறித்து, சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முதல்கட்ட தகவல்கள் தெரியவில்லை. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேஷியாவின் ஆளரவமற்ற வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளதால் உரிய தகவல்களைப் பெறமுடியமால் போனது என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்