இலங்கையில் கொரோனாவை விட அதிக மரணங்கள்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

திங்கள், 11 ஏப்ரல் 2022 (11:01 IST)
இலங்கையில் உள்ள மருந்து தட்டுபாட்டை சரிசெய்யாவிட்டால் கொரோனாவை விட அதிக மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை. 

 
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலையில் பல பகுதிகளிலும் அரசை எதிர்த்து போராட்டங்களை தொடங்கி உள்ளனர். இதனால் இலங்கை அரசே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது இலங்கை அரசின் வருவாயை அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இலங்கையில் உணவுப்பொருட்கள், எரிபொருள், மின்சார தட்டுப்பாட்டை தொடர்ந்து மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக ஸ்கேன் உள்ளிட்ட சேவைகள் கூட ஸ்தம்பித்துள்ளன. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் கூட இல்லாத நிலை உள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கம் முன்னரே தெரிவித்தது.
 
தற்போது மருந்துகளின் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களுக்குள் உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காவிட்டால் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களை விட அதிக மரணங்களை காண நேரிடும் என்று மருத்துவ குழுவினர் கோத்தபயா அரசுக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்