’உலக வரைப்படத்தில் இல்லாத அளவிற்கு அழித்துவிடுவோம்’- மிரட்டல் விடுக்கும் நாடு!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (07:31 IST)
ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி, வட கொரியா அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. 


 
 
அதனால், வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து  ஐ.நா சபை உத்தரவிட்டது. அதன் பிறகும், வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில், அந்நாடு, 5-வது அணுகுண்டு பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. மேலும், வட கொரியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
 
இந்நிலையில், தென் கொரியா, துணிச்சலாக வட கொரியாவிற்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது. அதில், கூறியதாவது, ”அணுகுண்டு தாக்குதல் நடத்த வட கொரியா முயற்சி செய்தால், அடுத்த நிமிடமே அந்நாட்டின் தலைநகரான பியொங்யாங்கை முற்றிலுமாக அணுகுண்டு வீசி அழித்து விடுவோம். இது வெறும் அச்சுறுத்தல் அல்ல. வட கொரியா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் அந்நாட்டின் தலைநகர் உலக வரைப்படத்தில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்படும்’ என மிரட்டல் விடுத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்