முன்னாள் அதிபர் கைது; தென் ஆப்பிரிக்காவில் கலவரம்! – 70 பேர் பலி!

புதன், 14 ஜூலை 2021 (09:36 IST)
தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபரை கைது செய்ததை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 9 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்த ஜேக்கப் ஜூமா ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா முழுவதும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் ஹோட்டல்கள், மால்களுக்குள் புகுந்து சூறையாடியதால் பரபரப்பு எழுந்துள்ளது. கலவரக்காரர்களை அடக்க ராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் ராணுவத்துடனான மோதலில் 70 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்