கடந்த ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோ நகரில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் பறந்து சென்றுள்ளது. அப்போது, தலைக்கு மேல் இருந்த பயணிகளின் உடைமைகளை வைக்கும் பகுதியில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. பாம்பு தொங்கிக் கொண்டு கீழே விழுவதைப் போல் இருந்ததைக் கண்ட பயணிகள் அலறினர்.
ஆனால், பெண் ஒருவர் தனது போர்வை மூலமாக பாம்பைப் பிடித்துள்ளார். இது குறித்து மெதினா கூறுகையில், விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக போர்வை மூலமாக பாம்பு கட்டுக்குள் வந்துவிட்டது. பின்னர், விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.