"கச்சத்தீவில் சிங்கள கடற்படை முகாம்" - வேல்முருகன் பகீர் தகவல்

சனி, 4 ஜூன் 2016 (14:53 IST)
தமிழர்களுக்கு சொந்தமான கச்சத்தீவில் சிங்கள கடற்படை முகாம் அமைக்க உள்ளதாக  வேல்முருகன் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத் தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவில் தற்போது உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தை இடித்துவிட்டு பிரமாண்ட கடற்படை முகாமை சிங்கள கடற்படை அமைத்துக் கொண்டிருப்பதை ஊடகங்கள் காட்சிப் பதிவுகளுடன் வெளியிட்டுள்ளன.
 
தற்போதைய தேவாலயத்துக்கு பதில் புதிய தேவாலயம் கட்டப் போகிறோம் எனக் கூறிக் கொண்டு இதுபோன்ற நரித்தனத்தில் சிங்களக் கடற்படை இறங்கியுள்ளது.
 
இது தொடர்பான வழக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆகையால் இது சர்ச்சைக்குரிய பகுதி. ஆனால் இதுபற்றி எதுவும் சிந்திக்காமல் சிங்கள கடற்படை தற்போதுள்ள தேவாலயத்தை இடித்துவிட்டு புதிய தேவாலயம் கட்டுகிறோம் எனக் கூறுகிறது.
 
தமிழ்நாட்டுத் தமிழருக்குச் சொந்தமான கச்சத்தீவில் இத்தகைய முகாமை இலங்கை கடற்படை அமைப்பது மிகவும் வன்மையான கண்டத்துக்குரியது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்