சீக்கிய மாணவனை ‘தீவிரவாதி’ என சீண்டும் அமெரிக்க மாணவர்கள் [வீடியோ]

செவ்வாய், 3 மார்ச் 2015 (13:07 IST)
அமெரிக்காவில் சீக்கிய சிறுவனிடம் சக பள்ளி மாணவர்கள் ’தீவிரவாதி’ என கூச்சலிட்டு அவமதித்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
 
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் பள்ளி பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் குழுவாக பயணம் செய்கிறார்கள். அப்போது அவர்களுடன் செல்லும் சீக்கிய சிறுவனை பிற மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள்.
 
அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்த மாணவிகள், ஹர்சுக் சிங்கை ’தீவிரவாதி, தீவிரவாதி’ என்று அழைக்கின்றனர். சிறிது நேரம் அமைதியாக இருக்கும் சிறுவன் ஹர்சுக் சிங், ’எனக்கு ஒரு கவலையுமில்லை’ என்று கூறுகிறான்.
 
இது தொடர்பான வீடியோவை சிறுவன் வெளியிட்டுள்ளான். மேலும், இது குறித்து அவன் கூறுகையில், "என்னுடன் இருக்கும் மற்ற மாணவர்கள் என்னிடம் இனவெறியுடன் நடந்து கொள்கின்றனர், என்னை ஆப்கானிஸ்தான் தீவிரவாதி என்று அழைக்கின்றனர்.
 
என்னிடம் நடந்து கொள்வதுபோல் மற்றவர்களிடம் இதுபோன்று இனி நடந்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு தெரியாதா, நான் இஸ்லாமியர் இல்லை, நான் சீக்கியர் என்று" என தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவி கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.
 
இதன் வீடியோ கீழே:
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்