பெட்ரோல் இல்லாத மாடல் ரிக்ஷாவை கண்டுபிடித்த திருப்பூர் தமிழன்

செவ்வாய், 14 ஜூலை 2015 (02:17 IST)
பெட்ரோல் இல்லாத மாடல் ரிக்ஷாவை திருப்பூரைச் சேர்ந்த தமிழர் சிவராஜ் கண்டுபிடித்துள்ளார்.
 

 
திருப்பூரைச் சேர்ந்தவர் சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோ மொபைல் தணியாக தாகம் அதிகம். இந்த துறையில் ஏதாவது சாதித்துவிட வேண்டும் என்று ஓவ்வோரு நாளும் சபதம் ஏற்று வெற்றிக்கான பாதையில் பயணித்தார்.
 
திருப்பூரைச் சேர்ந்தவர் சிவராஜ். எம்பிஏ பட்டதாரி. உலகமே வியக்கும் வண்ணம் இவர் கண்டுபிடித்துள்ள ஒரு கண்டுபிடிப்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தற்போது, இந்தியாவில், பெருபாலும் இரண்டு சக்கர வானகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் பெட்ரோல் மூலமே இயங்கி வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே, பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ண் உள்ளது. இதனால் வான ஓட்டிகள் பெரும் கலவை அடைந்தனர்.
 
இந்நிலையில், பெட்ரோல் இல்லாத, சூரிய சக்தியால் இயங்கும் எக்கோ ஃப்ரி கேப் என்ற வாகனத்தை கண்டுபிடித்துள்ளார். மூன்று சக்கர ரிக்க்ஷா போன்று காட்சி தரும் வகையில் இந்த வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இந்த கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்